பல கோடி மதிப்புள்ள கோயில் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்படுமா?
By -கே.கே.பாரதிமணி-
First Published : 05 December 2012 04:42 AM IST

-
ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோயிலின் முகப்பு தோற்றம்.
இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள பெருந்துறை ஸ்ரீ செல்லாண்டியம்மன் திருக்கோயிலுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மற்றும் கட்டடங்கள் பல ஆண்டுகளாக தனியாரின் ஆக்கிரமிப்பில் இருந்து வருகின்றன. இவற்றை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெருந்துறை மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையின் மையப் பகுதியில் உள்ளது அருள்மிகு ஸ்ரீ செல்லாண்டியம்மன் திருக்கோயில். கொங்கு வேளாளக் கவுண்டர்களின் ஒரு பிரிவினரான காடை குலம், மேதி குலம் மக்களின் குலதெய்வமான இக்கோயில் கடந்த 1969ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டுவரப்பட்டது.
இக்கோயிலுக்குச் சொந்தமான 10.87 ஏக்கர் நிலம் பெருந்துறையின் பழைய பஸ் நிலையம் அருகே கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ளது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.300 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலத்தில் 30-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் தனியார் பள்ளி, பெட்ரோல் பங்க்குகள் என சுமார் 50 வாடகைதாரர்கள் உள்ளனர். இவர்களில் பலர் நீண்ட காலமாக வாடகை செலுத்தாமல் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதே பகுதியில் பேரூராட்சிக்குச் சொந்தமான கடைகள் ஒரு சதுர அடி ரூ.115 வரை வாடகைக்கு ஏலம் கேட்கப்பட்டுள்ளன.
ஆனால், கோயில் நிலத்தை அனுபவித்து வருபவர்கள், ஒரு சதுர அடிக்கு 66 பைசா மட்டுமே வாடகை செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதைக்கூட பல ஆண்டுகளாக பலர் செலுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அறநிலையத் துறைக்குச் செலுத்த வேண்டிய வாடகை பாக்கி மட்டும் ரூ.4 கோடிக்கு மேல் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
இது குறித்து ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோயில் நற்பணி மன்றத் தலைவர் எம்.செல்லமுத்து கூறியது:
கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் காலி மனையிடங்களாக இருந்த 10.87 ஏக்கர் நிலத்தை பலர் தொழில் செய்வதற்காக கோயில் நிர்வாகத்திடம் இருந்து வாடகைக்குப் பெற்றனர். தொடர்ந்து முறையாக வாடகை செலுத்தி வந்தவர்கள் பிறகு தவணை தவறியும், அதன் பிறகு வாடகை செலுத்தாமலும் இருந்தனர். இவர்கள் மீது துறை அதிகாரிகள் முறையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
பல ஆண்டுகளாக பெரும்பாலான வாடகைதாரர்கள் வாடகை செலுத்தாமல் உள்ளனர். தற்போதைய வாடகை பாக்கி மட்டும் ரூ.4 கோடிக்கும் மேல் உள்ளது. சிலர் குறைந்த வாடகையை அறநிலையத் துறைக்கு செலுத்திவிட்டு மாதம் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை கடைகளை உள்வாடகைக்கு விட்டுள்ளனர். சில வாடகைதாரர்கள் கோயில் பெயரில் இல்லாமல், தங்களது பெயரில் சொத்துவரி செலுத்தியுள்ளனர்.
இதனால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் சொத்து பறிபோகும் நிலையில் உள்ளது. இந்த விவகாரத்தில் அரசு நேரடியாகத் தலையிட்டு, கோயிலுக்குச் சொந்தமான சொத்துகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இது குறித்து கோயில் செயல் அலுவலர் (பொ) இரா.சுகுமார் கூறியது:
கோயில் சொத்தை ஆக்கிரமித்திருப்பவர்கள், வாடகை செலுத்தாதவர்கள் குறித்த பட்டியலும், வாடகை பாக்கி குறித்த முழு விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது. முழுவிவரமும் கிடைத்தவுடன் ஆக்கிரமிப்புப் பகுதிகளை மீட்க பாரபட்சமின்றி சட்டப்படியான நடவடிக்கைகளை அறநிலையத்துறை எடுக்கும் என்றார்.
பெருந்துறையில் பல ஆண்டுகளாக தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த அரசுக்குச் சொந்தமான 1.25 ஏக்கர் நிலத்தை, கடந்த மாதம் வருவாய்த்துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் மீட்டு அரசிடம் ஒப்படைத்துள்ளார்.
இதேபோல் அறநிலையத் துறைக்குச் சொந்தமான ரூ.300 கோடி மதிப்புள்ள இந்த சொத்தையும் முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, அமைச்சர் மீட்டுத்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:
Post a Comment